நிதி முகாமையாளர் ஒருவர் யாழ்தேவி ரயிலில் பாய்ந்து தற்கொலை.

அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் கிளையின் முகாமையாளராக இருந்த அதிகாரி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் குதித்து குறித்த நபர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையும், பிரபல நிதி நிறுவனத்தின் முகாமையாளருமான 37 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெதகம பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த அவர், மெதகம ரயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ரயிலில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரசங்கஸ்வெவ மற்றும் மெதகம ரயில் நிலையங்களுக்கு இடையில் வடக்கு ரயில் பாதையில் பயணித்த யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, ரயில் நிறுத்தப்பட்ட பின்னர், சடலம் மதவாச்சிய ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்