இலங்கை இராணுவத்தின் புதிய சீருடைகள் மாற்றம்.

இலங்கை இராணுவத்தில் உள்ள சிறப்பு படையணிகளான கொமாண்டோ மற்றும் விஷேட படையணியைச் சேர்ந்த படை வீரர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகமாக்கி வழங்கி வைக்கப்பட்டன.
மாதுரு ஓயவில் உள்ள விஷேட படையணி பயிற்சி முகாமில் அண்மையில் 300 படை வீரர்கள் பயிற்சி நிறைவின் வெளியேறும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த விஷேட படையணியின் படைத் தளபதியும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்த புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த புதிய சீருடையானது 55% பருத்தியையும், 45% பொலிஸ்டர் துணிகளில் சிறப்பு ரிப்ஸ்டாப் வலுவூட்டும் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது .