முசலி பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்.

முசலி பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று 17.09.2020 காதர் மஸ்தான் அதலைமையில் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்வு.

இவ்வருடத்திற்கான முதலாவது பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (17.09.2020) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் முசலி பிரதேச செயலாளர் திரு. S . ரஜீவன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் முசலி பிரதேச செயலக கேற்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன்,பிரதேச சபை தவிசாளர்,திணைக்கள தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பின்வரும் முக்கிய விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன. கிராம ரீதியான ஆயுர்வேத வைத்தியசாலையொன்றை அமைத்தல், வன இலாக்கா மற்றும் கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைதிட்டம் தொடர்பாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து அத்துமீறி மீன் பிடித்தல் தொடர்பாகவும், பிரதேச சபையூடாக. கிராமங்களுக்கான வீதி விளக்குகளை பொறுத்துதல், நீர்பாசன திணைக்களத்தினால் மக்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையும், மின்இணைப்பு, நீர் விநியோகத்திட்டம் சம்பந்தமாகவும், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் சம்பந்தமாகவும், சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாகவும், இலங்கை போக்குவரத்து சபைசம்பந்தமான விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.