ரியாத் நகரில் அவசரமாக கூட்டப்பட்ட உச்சி மாநாடு.
சவூதி அரேபியா நாட்டில் ரியாத் நகரில் இளவரசர் அஷ்ஷைஃக் முஹம்மது இப்னு சல்மான் அவர்கள் தலைமையில் உச்சி மாநாடு அவசரமாக கூட்டப்பட்டு நேற்று நடைபெற்றது.
அனைத்து இஸ்லாமிய நாடுகள் மற்றும் துருக்கி நாட்டின் ஜனாதிபதி தையிப் ரளா எர்டோகான் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
அசாதாரண சூழலில் உடனடியாக கூட்டப்பட்ட இந்த உச்சி மாநாட்டில்
“இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். பாலஸ்தீன ஆக்ரமிப்பை கைவிடவேண்டும். பாலஸ்தீனத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீது கொடூரமாக நடத்தப்பட்ட அனைத்து போர்குற்றங்களுக்கும் இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும்.. ”
என அஷ்ஷைஃக் முஹம்மது இப்னு சல்மான் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
“முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படக்கூடிய தாக்குதல்களை இனியும் பொறுத்துக் கொள்ளமுடியாது. இனி இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” என்ற கருத்துக்களை ஏனைய இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.