நினைவேந்தல் தடைகளை விலக்குமாறு தமிழ் கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதம், இல்லையேல் போராட்டம்

இலங்கை அரசாங்கம் பிழையான நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை தொடர் போராட்டத்திற்கு தள்ளுகின்றனர் நினைவேந்தல் தடைகளை விலக்குமாறு எமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளோம் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

நல்லூர், இளங்கலைஞர் மண்டபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் பின்னர் அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களினுடைய விடுதலைப் போராட்டத்தில் போராளிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு அஞ்சலி செழுத்துவதும், நினைவுக் கூட்டங்களை நடாத்துவதும் ஒவ்வொரு தமிழ் மக்களின் உரிமையும் கடமையுமாகும்.

அகவே இலங்கை ஐனாதிபதி மற்றும் பிரமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக இந்த தடையுத்தரவை நீக்க வேண்டும்.

விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை பயங்கரவாதம் என்றோ அல்லது விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி தடைசெய்ய முற்படுவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல.

அரசாங்கம் நினைவேந்தல்களை நடாத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்ற எமது கோரிக்கையை முன்வைத்து இருக்கின்றோம். இது தொடர்பாக இரு நாட்களுக்குள் அரசு முடிவினை அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு முடிவுகளை அறிவிக்காத பட்சத்தில் அனைத்துக் கட்சிகளும் மீண்டும் கூடிப் பேசி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். அந்த நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியாக இலங்கை அரசை கண்டிப்பதாக அமையும்.

இலங்கை அரசாங்கம் பிழையான நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை தொடர் போராட்டத்திற்கு தள்ளுகின்றனர். நாளை எமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளோம். அவரின் பதிலைப் பொறுத்து எமது நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.