ஆங்கிலேயரது ஆட்சி காலத்தில் இழந்த பாரம்பரிய நிலம் மீண்டும் விவசாயிகளுக்கு.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு மீண்டும் அந்த விளைநிலங்கள் முழுமையாக அவர்களுக்கே வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி மற்றும் விவசாய நில உரிமைகள் வழங்கப்படவுள்ளதுடன், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இதனை ஆரம்பித்து, சில வருடங்களில் அது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1897 ஆம் ஆண்டு இலங்கை வேஸ்ட்லேண்ட் கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது, அதன் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் கிராமப்புற நிலங்களை கையகப்படுத்தியது.
அதன் பிறகு, 1935 ஆம் ஆண்டு நில மேம்பாட்டு ஆணையின் கீழ், உரிமத் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது.