மணிப்பூரில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 9 போராட்ட அமைப்புகளுக்கு தடை – மத்திய உள்துறை அமைச்சகம்
மணிப்பூரில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 9 போராட்ட அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மணிப்பூரில் குறிப்பிட்ட சில அமைப்புகள் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாகக் கூறி, மெய்தி சமூகத்தை சேர்ந்த 9 போராட்ட அமைப்புகளுக்கு UAPA சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
PLA, UNLF,RPF,MPA உள்ளிட்ட 9 அமைப்புகள் மீது இந்த தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த அமைப்புகள் ஈடுப்படுவதாகவும், சர்வதேச எல்லைகளில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்களை சில குழுக்கள் வாங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து நிதியை பெற்று சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே நேரிட்ட கலவரத்தால் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.