10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால் தேர்வு தேதி அறிவிப்பு எப்போது என 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்நோக்கி காத்திருந்தனர். மேலும் ஜெஇஇ, நீட் போன்ற தேர்வுகளை கருத்துக்கொண்டு அட்டவணை தயார் செய்யப்படும் என்றும் அறிவிக்ப்பட்டிருந்தது. இந்நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தேதிகளை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதன்படி,

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது.

26.03.2024 – தமிழ், இதர மொழிப்பாடங்கள்
28.03.2024 – ஆங்கிலம்
01.04.2024 – கணிதம்
04.04.2024 – அறிவியல்
06.04.2024 – விருப்ப மொழிப்பாடம்
08.04.2024 – சமூக அறிவியல்

11 ஆம் வகுப்பபு பொதுத்தேர்வுகள் மார்ச் 04 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 01 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.