டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் புத்தெழுச்சி பெறுகிறது புதுமுறிப்பு.
புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.
இந்த உற்பத்தி நடவடிக்கைகள் மூலம் புதுமுறிப்பு நன்னீர் மீனவர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 40 குடும்பத்தினருக்கு நிரந்தர வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதியில், கைவிடப்பட்டிருந்த நன்னீர் மீன் உற்பத்தி தொட்டிகள் புனரமைக்கப்பட்டு மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீன் குஞ்சு உற்பத்திகளை மேற்கொள்ளக் கூடிய மேலும் 5 தொட்டிகள் தெரிவு செய்யப்பட்டு உடனடியாக உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய தொட்டிகளையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, உடனடியாக உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அண்ணளவாக 4 இலட்சம் நன்னீர் மீன் குஞ்சுகளை இரணைமடு குளம் உட்பட்ட நன்னீர் நீர் நிலைகளுக்கு விநியோகிக்க முடியும் எனபதுடன், புதுமுறிப்பை சேர்ந்த சுமார் 40 குடுமபங்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை சுமார் 6 இலட்சம் வருமானத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.