ஶ்ரீலங்கன் விமானத்தில் வைத்து சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியர் கைது!
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஶ்ரீலங்கன் விமானத்தில் இலங்கைப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை அடுத்து, அதனைச் செய்த இந்தியர், விமான சேவையின் ஊழியர்களால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்று காலை 07.20 மணியளவில் சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-266 ல் இந்த பாலியல் வன்கொடுமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர் 49 வயதான இந்தியர் ஆவார். இவர் தச்சு தொழிலாளியாவார். ஸ்ரீலங்கன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த புலம்பெயர்ந்த பயணியான இவர், வேறொரு விமானத்தில் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் தனது தந்தையைப் பார்த்துவிட்டுத் விமானத்தில் , இலங்கைக்கு ஒரு தாயும் அவரது இரண்டு சிறுமிகளும் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் 08 வயதுடைய சிறுமி , விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த இந்தியப் பிரஜையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், இது குறித்து விமான ஊழியர்களிடம் முறைப்பாடு செய்ய தாய் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவருகிறது.
அதன்படி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதையடுத்து குறித்த இந்திய பிரஜையை கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் வல்லுறவுக்கு உள்ளான இலங்கை யுவதியையும், இந்திய பிரஜையையும் மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னர், இந்திய பிரஜை , கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் Malcolm Peth அவர்களின் பணிப்புரையின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் சந்தன, பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்க மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் செவ்வந்தி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.