நாடு திரும்பினார் அசாணி.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்று ஞாயிற்றுக்கிழமை (17) நேரலையாக ஒளிபரப்பாகியது.
இந்நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றியாளரை அறிவித்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே இறுதிச்சுற்றில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா வெற்றிப்பெற்றார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இன் வெற்றிப்பெற்ற கில்மிஷாவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அவருடைய பாடும் திறமை பலராலும் வியக்கப்பட்டு தன்னுடைய தாய் மாமா மற்றும் போரில் இறந்தவர்களை பற்றி பேசி பலரையும் ஆரம்பத்திலேயே கில்மிஷா கண்கலங்க வைத்திருந்தார்.
அதை தொடர்ந்து ஜூனியருக்கான நிகழ்ச்சி ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் சில போட்டியாளர்கள் வெளியேறி கடைசியாக ரிஷிதா ஜவகர், கில்மிஷா, சஞ்சனா, ருத்தேஷ்குமார், கனிஷ்கர் மற்றும் கவின் என ஆறு பேர் இறுதி நிகழ்ச்சிக்கு தேர்வாகி இருந்தனர்.
இந்தநிலையில் கண்டியை சேர்ந்த அசாணியும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தினார் அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தின் ஊடாக, நாடு திரும்பினார்.