மீண்டும் கொரோனா தடுப்பூசியா..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..?
மீண்டும் கொரோனா பரவல் துவங்கியுள்ள காரணத்தால், தடுப்பூசி வேண்டுமா.? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான JN -1 தொற்று பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் மட்டும் 656 பேர் புதியதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இதுவரை 3,742 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கேரளாவில் ஒருவர் பலியாகி இருக்கின்றார். இந்நிலையில், மாநில அரசுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மக்களிடம் தடுப்பூசி போடவேண்டுமா? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளது. இந்தியா SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG} தலைவர் என்.கே. அரோரா இது குறித்து பேசுகையில், “ஜேஎன்.1 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக நான்காவது தடுப்பூசி அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதே வயதிலுள்ள ஆபத்தான நோயுள்ளவர்கள் மற்றும் இதுவரை ஒரு தடுப்பூசி கூட போடாதவர்கள் மூன்றாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சாதாரண மக்களுக்கு நான்காவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் கூறிய அவர், அதிர்ஷ்டவசமாக இந்த ஒமிக்ரான் மாறுபாடு தீவிர நோய்களுடன் தொடர்புடையாதாகவோ, மருத்துவமனையில் சேரும் அளவுக்கு தீவிரமாகவோ இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.