இரண்டாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.
இவ்வருடத்திற்கான இரண்டாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் வவுனியா மாவட்ட செயலாளர் திரு.சமன் பந்துலசேன நெறிப்படுத்தலின் கீழ் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான வடமாகாண ஆளுனர் மதிப்பிற்குரிய பி.எம். சார்ள்ஸ்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இணைத்தலைமையில் முன்னாள் பிரதியமைச்சரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பங்கேற்புடனும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதீயுத்தீன்,செல்வம் அடைக்கலநாதன்,சார்ள்ஸ்நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் வருகையோடு இன்று (21.09.2020) சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சென்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் மீள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமான மிக முக்கிய விடயங்களும் இன்று கலந்துரையாடப்பட்டது.
குறித்த நிகழ்வில் திணைக்கள தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.