சென்னையில் ரூ300 மாத வாடகையில் பிஜி.. தமிழக அரசின் தோழி விடுதிகள் பற்றி தெரியுமா?
மாதம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பாதிக்கும் பெண்கள் PG யில் அல்லது வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தால் அவர்கள் இனி மாதம் 300 ரூபாய்க்கு சென்னையில் தங்க இடம் கிடைக்கிறது.. அரசின் மகளிர் பிஜி ஹாஸ்டல் பற்றி உங்களுக்கு தெரியுமா? “தோழி பெண்கள் தங்கும் விடுதி ” பற்றி இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டின் தலைநகராமான சென்னைக்கு படித்துவிட்டு வேலை தேடி வரும் முதல் தலைமுறை பட்டதாரி பெண்கள், இங்கு உறவினர்கள் வீடுகளில் அல்லது அட்வான்ஸ் கொடுத்து வாடகை கொடுத்து வீடு எடுத்து தங்குவதே எளிதானது அல்ல.. உறவினர்கள் வீடுகளில் தங்க முடியும் என்றாலும், அந்த வசதி இல்லாதவர்கள் அட்வான்ஸ் கொடுத்து வாடகைக்கு அறை எடுத்து தங்குவது சென்னையில் உண்மையில் சவாலானது. இதற்கு காரணம் வாடகை தான். சென்னை நகர்பகுதிக்குள் எங்கு சென்றாலும் வாடகை வாயை பிளக்க வைக்கும் வகையில் உள்ளது. அட்வான்ஸ் கேட்ட உடனே தலை சுற்ற வைக்கும்.
இதனால் சென்னையில் வேலை தேடிவரும் முதல் தலைமுறை பட்டதாரி பெண்கள், பிஜி என்று பரவலாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தங்கும் விடுதியில் மாத வாடகைக்கு தங்குகிறார்கள். அவர்கள் பிஜி ஹாஸ்டலுக்கு 7000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும். மிக சாதாரணமான ஹாஸ்டல்களில் கூட 6000 ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிப்பார்கள். மாதம் 15000 அல்லது 25000 வரை சம்பளம் வாங்கும் முதல் தலைமுறை பட்டதாரிகள் இந்த பிஜி ஹாஸ்டல்களில் தான் தங்குகிறார்கள்.
இந்த சூழலில் முதல் தலைமுறை பட்டதாரி பெண்கள் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெருநகரங்களுக்கு வேலை தேடி வரும் போது, அவர்களுக்கு மகளிர் தங்கும் விடுதிகள் குறைந்த வாடகையில் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு கருதியது. அதன்விளைவாகவே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், உத்தியோகபூர்வ வருகைக்காகவும் செல்லும் பணிபுரியும் பெண்களுக்கு “தோழி பெண்கள் தங்கும் விடுதி” தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ (TAMIL NADU WORKING WOMEN’S HOSTEL CORPORATION Ltd) சார்பில் பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதியை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. தோழி” என்று அழைக்கப்படும் இந்த மகளிர் விடுதிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். மிகவும், மலிவு விலையில் அமைக்கப்பட்டிருப்பது தான் சிறப்பு அம்சம் ஆகும். தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் அறைகளின் பதிவு செய்ய முடியும்.
சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையை பொறுத்தவரை வடபழனி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரத்தில் இருக்கிறது.
தோழி என்று அழைக்கப்படும் தமிழக அரசின் பிஜி ஹாஸ்டலில் உள்ள வசதிகள்: சாப்பாட்டு அறை, லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு கூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் இருக்கிறது. இரவு 10:00 மணக்குள் விடுதிக்குள் வர வேண்டும். அதேநேரம் 24 மணி நேரம் ஷிப்ட் பணிபுரிபவர்கள், பணிபுரியும் நேரத்தின் படி வரலாம்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம், மகளிர்கள் மட்டுமே தங்க அனமதி என்பதால், குடும்பங்கள்/உறவினர்கள் வந்தால் தங்க அனுமதி இல்லை- இந்த விடுதியை பொறுத்தவரை வெறும் 300 ரூபாய் செலுத்தி மாதம் தங்கி கொள்ளும் வசதி இருப்பதுதான் கூடுதல் சிறப்பு அம்சமாகும். மாதம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பாரிக்கும் பெண்கள் PGயில் அல்லது வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தால் அவர்க மாதம் 300 ரூபாய்க்கு சென்னையிலேயே தங்க முடியும்.
தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் கூடுதல் தகவல்களை அறியலாம். techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும். இதேபோல் http://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற தகவல்களையும் பெறலாம்.