வெள்ளத்தில் நீராடச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன் தீவு பிரதேசத்தில் நேற்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி, கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நண்பர்களுடன் வெள்ள நீரில் நீச்சலாடியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்குடா சுழியோடிகள் சடலத்தை மீட்டனர். சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.