யுக்திய கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள் – ஐநா மனித உரிமைகள் கவுன்சில்
போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா காவல்துறை முன்னெடுத்த நீதி (யுக்திய) கைது நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றில், இந்த நடவடிக்கையை மறுஆய்வு செய்து, சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையிலான கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
போதைப்பொருள் பாவனை செய்பவர்களுக்கும் மனித உரிமைகள் உள்ளதாகவும், அவர்களுக்கு பாகுபாடு காட்டப்படாமலும், இழிவுபடுத்தப்படாமலும் கண்ணியத்துடன் வாழ உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றவாளிகளை தன்னிச்சையாக கைது செய்து இராணுவத்தால் நடத்தப்படும் கட்டாய புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கும் வழக்குகளையும் ஐநா நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீதான தற்போதைய அடக்குமுறை குறித்து அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் பாவனையாளர்களை சொந்த விருப்பத்தின் பேரில் புனர்வாழ்வுக்கு அனுப்புவதுடன் கட்டாயமான புனர்வாழ்வு நிலையங்கள் மூடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் தமது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான தற்போதைய சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகவே உருவாக்கப்பட வேண்டுமெனவும், போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக ஆயுதப்படைகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்ட முழு அறிவிப்பும் கீழே உள்ளது,
GENEVA (22 January 2024) – UN experts* expressed alarm at the heavy security-driven approach of Sri Lanka’s drug response. They called on authorities to immediately suspend and review so-called Operation ‘Yukthiya’ and to focus on policies based on health and human rights.
“Drug users have human rights,” the experts said. “They deserve to live a life with dignity without facing further discrimination and stigmatisation.”
They deplored reported cases of arbitrary arrests of thousands of drug offenders from marginalised socio-economic groups, and the detention of hundreds in compulsory military-run rehabilitation centres. Torture and ill-treatment were also reported during the security operation known as ‘Yukthiya’.
“The current context of severe repression against suspected drug offenders is deeply worrying,” the experts said.
They stressed that rehabilitation must be conducted from a harm reduction perspective, respecting the autonomy and informed consent of drug users, including the right to refuse medication.
“Compulsory rehabilitation centres should be closed immediately and replaced by voluntary, evidence-based, rights-based and community-based social services,” said the experts, who stand ready to provide technical cooperation.
They urged Sri Lankan authorities to investigate thoroughly and impartially any allegations of torture, ill-treatment and denial of due process and fair trial rights.
“Irregularities in the judicial process of sending people to rehabilitations centres should also be investigated,” the experts said.
They called on the Government to review its current legislation on drug offences and to end the involvement of armed forces in drug control and treatment activities, in line with international human rights law and standards.
The experts raised concerns about Sri Lanka’s legislation on the treatment of suspected drug offenders in a letter sent to the Government in 2023.
*The experts: Priya Gopalan (Chair-Rapporteur), Matthew Gillett (Vice-Chair on Communications), Miriam Estrada-Castillo, and Mumba Malila, Working Group on arbitrary detention; Margaret Satterthwaite, Special Rapporteur on the Independence of Judges and Lawyers; Tlaleng Mofokeng, Special Rapporteur on the right of everyone to the enjoyment of the highest attainable standard of physical and mental health.
The Special Rapporteurs and Working Groups are part of what is known as the Special Procedures of the Human Rights Council. Special Procedures, the largest body of independent experts in the UN Human Rights system, is the general name of the Council’s independent fact-finding and monitoring mechanisms that address either specific country situations or thematic issues in all parts of the world. Special Procedures’ experts work on a voluntary basis; they are not UN staff and do not receive a salary for their work. They are independent from any government or organization and serve in their individual capacity.
‘உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி நான்தான்’ – ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!
மீண்டும் கூட்டமைப்பாக நாம் ஒன்றிணைவோம்! தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் பகிரங்க அழைப்பு.
வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏக்களும் ஒத்துப்போகவில்லை
சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் நெருக்கடி தொடர்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் – சீனாவின் கோரிக்கை.
ஈரான்-பாகிஸ்தான் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனா ஆதரவு.
அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது.
‘உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி நான்தான்’ – ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!
இன்று பெலியத்தவில் கொல்லப்பட்ட சமன் பெரேராவின் பின்னணி என்ன? ஏன் கொல்லப்பட்டார்?