20 ஐ ஆதரிப்பவர்கள் எதிர்காலத்தில் அதற்காக மன்னிப்புக் கோருவார்கள் – ஜே.வி.பி.
“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவார்கள்.”
– இவ்வாறு ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
20ஆவது திருத்தத்தால் முதலில் பாதிக்கப்படப் போகின்றவர்கள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அதற்காகக் கவலைப்படுவார்கள்.
ஓரிரு வருடங்களில் பொதுமக்களிடம் அதற்காக மன்னிப்புகி கோருவார்கள்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும்போது அரசு தவறுக்காக வருந்தும்” – என்றார்.