இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இந்த முடிவை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் 2022 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
மேலும், இதே குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட இம்ரான் கான் தலைமையிலான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷா மெஹ்மூத் குரேஷிக்கும் இதே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
70 வயதான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2022 இல் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கான், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்து, அரசியல் ரீதியாக அவரை மௌனமாக்குவதற்கான முயற்சிகள் என்று கூறுகிறார்.