கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரம்.. தமிழகம் முழுவதும் 27 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது.
சென்னை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 27-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோவையில் உக்கடம், கரும்புகடை,போத்தனூர் உள்ளிட்ட 12 இடங்களில் காலை 6 மணி முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் அக்ரம், பெரம்பூரைச் சேர்ந்த முகமது அப்துல்லா ஆகியோரின் வீடுகளிலும், சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஜாபர் அலி, பல்லாவரத்தைச் சேர்ந்த நவாஸ் ஆகியோரின் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
இதனிடையே, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே காஜிமார் தெருவில் முகமது இப்ராஹீம் என்பவரின் வீட்டிலும், நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பழனிபாபா அரசியல் எழுச்சி இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பக்ருதீன் அலி அகமது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மங்கலம்பேட்டை என்ற பகுதியில் சுலைமான் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் இவர் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போல, திருச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலதிக செய்திகள்
10 ஆயிரம் வீட்டுத் திட்டம் பெப்ரவரி 19இல் ஆரம்பம் – ஏப்ரலில் காணி உரிமை என்கிறார் அமைச்சர் ஜீவன்.
யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறத் தகுதியானவர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு.
யாழில் பஸ்ஸில் பெண்களைச் சீண்டிய இருவர் கைது!
இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவுக்கும் அநுர விஜயம்.
கேரள கஞ்சா, மதுவுடன் மூவர் வசமாகச் சிக்கினர்!
அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக மீண்டும் ஹர்ஷ டி சில்வா நியமனம்!
அநுரவின் கட்சி ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கும்! – ஐ.தே.க. நம்பிக்கை.