போலி காணொலிகளை பரப்புவோர் மீடு கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை
சமீப காலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக சமூக வலைத்தளங்களில் போலி காணொலிகள் வைரலாகி வரும் நிலையில், போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கணொலிகள் பொய்யானவை. இதுபோன்ற பொய்யான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ மக்கள் அச்சமடைய வேண்டாம்.
மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 100 அல்லது 112 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
மேலும் பொய்யான செய்திகள், காணொலிகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலதிக செய்திகள்
நவல்னியின் மரணத்திற்கு புடின் தான் காரணம் – பிடன் கூறுகிறார்.
மாலைதீவின் வெளிநாட்டு கடன் நெருக்கடி குறித்து ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் 354 மில்லியன் டாலர் செலுத்த நீதிமன்றம் உத்தரவு.