லட்டு மாதிரி 6 அறிவிப்பு.. ஏக குஷியில் பெண்கள்!
பெண்களுக்கான முக்கியமான 6 அறிவிப்புகளை தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு ரூ.843 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் . இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மருத்துவ செலவுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்; ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்
மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஒரே நேரத்தில் முக்கியமான நல்ல செய்தியை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார்.
பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், என்று அறிவித்துள்ளார்.
பெண்களுக்கான அறிவிப்பு: பெண்களுக்கான முக்கியமான 6 அறிவிப்புகளை தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.
1.அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கு 370 கோடி ஒதுக்கப்படும்.
2. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் மலைப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும்.
3. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
4. மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ₹3050 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
5. பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ₹26 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
6. மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும். /உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்
மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் தமிழர்களை தலைநிமிரச் செய்துள்ளன. 1990-ல் இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டது; காலை உணவு திட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது; மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேச சாதனையாளர்களாக மாற்றுவது, அறிவுசார் பொருளாதார வளர்ச்சி, சமநிலையுடன் கூடிய பெண் முன்னேற்றம், நிலையான எதிர்காலம், தமிழ்மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது, என்று அறிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
மீகொட பெண் ஊழியரை சுட்டு, கொள்ளையடித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், ரஃபா பகுதியில் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறது இஸ்ரேல்!
ரணில் , நினைப்பது போல் தந்திரமானவர் இல்லை – அனுர.
அமலாக்கத்துறை சம்மனை 6-வது முறையாக நிராகரித்த கேஜரிவால்!
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000: தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம்
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை இன்று ஆரம்பம்.
மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு.
நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் சட்டப்பூர்வமாக செல்லாததாகிவிடும் : ஜீ.எல்.
2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு!
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை இன்று ஆரம்பம்.
மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு.
நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் சட்டப்பூர்வமாக செல்லாததாகிவிடும் : ஜீ.எல்.
தாய் மற்றும் மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிப்பு.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான பிரான்ஸ் தூதர் மற்றும் கடற்படை தளபதி இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு.