யாழ். சிறையில் இருந்த 3 இந்திய மீனவர்களும் வெலிக்கடைச் சிறைக்கு.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 3 இந்திய மீனவர்களும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இரு படகோட்டிகள் மற்றும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் விடுவிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் என மூவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்ற அடிப்படையில் இந்த 3 கைதிகளும் தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.