முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் காலமானார்!
முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல் இன்று (27) காலமானார்.
அவர் தனது 98 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரிதிநித்துவப்படுத்திய அவர், முன்னாள் நிதி அமைச்சராகச் செயற்பட்டிருந்தார்.
நிதி அமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு – செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.