நான் பாராளுமன்றத்திற்கு வரமாட்டேன் – பசில் ராஜபக்ஷ
அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய பசில் ராஜபக்ஷ, தேர்தலின் மூலம் நாடாளுமன்றம் நுழையும் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
மார்ச் 05ஆம் திகதி காலை இலங்கை வந்த பசில் ராஜபக்ச, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் விவகாரங்கள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
“உத்தியோகபூர்வ ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் நான் பாராளுமன்றத்திற்கு வரமாட்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்தால்தான் முடியும்” என்றார். பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலை ஏற்பாடு செய்வதற்காக பசில் ராஜபக்ச இலங்கை வரவுள்ளதாகவும், அவர் வந்தவுடன் உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க, யூடியூப் கலந்துரையாடலின் போது தெரிவித்ததுடன், அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் பசில் ராஜபக்சவிடம் கேட்டனர்.
“எந்த தேர்தல் வந்தாலும் நான் ஏற்பாடு செய்வேன்.” என பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொஹொட்டுவ தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பீர்களா அல்லது மொட்டுக்காக ஒரு வேட்பாளரை வழங்குமா என ஊடகவியலாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
“அது குறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. எமது பொலிட்பீரோ கூடி எமது தலைவர், மக்கள் மற்றும் கட்சியின் கருத்துக்களை வைத்து , அடுத்த சில நாட்களில் முடிவு எடுப்போம். இப்போதே கவலைப்பட தேவையில்லை.” என பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.