40 எம்.பிக்களுடன் எதிரணியில் அமர்வாரா நாமல் ராஜபக்ச எம்.பி.?
40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தான் எதிரணியில் அமரத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச தலைமையிலான மொட்டுக் கட்சி குழுவொன்று எதிரணிக்குச் செல்லவுள்ளது எனவும், அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு வியூகம் வகுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையிலேயே இந்த அரசின் இருப்பு தங்கியுள்ளது எனவும், எனவே, மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்பட தயாரில்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் .
அதேவேளை, அடுத்த எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
மைத்திரி போட்டியிட்ட சின்னத்தில் ரணிலும் களமிறங்க முடிவு? – சிங்கள ஊடகம் தகவல்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை கையளிப்பு!
உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்.
ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் – நாடு திரும்பிய பஸில் வலியுறுத்து.
யாழில் கட்டடம் அமைக்க கிடங்கு வெட்டியபோது சிக்கியது கைக்குண்டு.
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குக! – பாதுகாப்புச் செயலாளரிடம் ஆளுநர் நேரில் கோரிக்கை.
அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு! – வவுனியாவில் பரபரப்பு.
வடக்கில் சுகாதாரத்துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துரைத்த ஆளுநர்!
கழிவுநீர் கால்வாயில் குதித்த ‘கதிரானவத்தை குடு ராணி’ – மடக்கிப் பிடித்த மட்டக்குளி பொலிஸார்.