குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் சிஏஏ சட்ட அறிவிக்கையை மத்திய பாஜக அரசு வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்றும் பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act 2019) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமான பணிகளை நிறைவு செய்வதற்கு 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். வங்கிக் கணக்கு மூலம் நடிகர் சங்கத்திற்கு விஜய் அனுப்பியுள்ளார். இதுவரையில் சுமார் 12 கோடி ரூபாய் நிதி நடிகர் சங்கத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய், நடிகர் கமல்ஹாசன், கார்த்தி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
வட்டுக்கோட்டையில் பயங்கரம் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை. (பிந்திய இணைப்பு)