13 வருட விசாரணையின் பின்னர் மாணவியை வன்புணர்ந்த 52 வயது நபருக்கு 10 வருட கடூழியச் சிறை!
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 13 வருட விசாரணையின் பின்னர் குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை
13 வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் பிரதிவாதிக்கு எதிராக கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்திருந்தார்.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 52 வயதுடைய நபருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் இந்தத் தீர்ப்பு இன்று பகல் வழங்கப்பட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த பாருக் மொஹமட் சாலித் என்ற நபர் , அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குக் குறைவான பாடசாலை சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாடசாலை ஊடாக சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததையடுத்து, அந்த நபர் மீது நானு ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் அவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், வழக்குக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
இதன்போது சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பாருக் மொஹமட் சாலித் (வயது 52) என்ற நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
அத்துடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இந்தத் தொகையைப் பாதிக்கப்பட்டவருக்கு வழங்காத பட்சத்தில் குற்றவாளி மேலும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
குற்றவாளி நீதிமன்றத் தண்டனைப் பணமாக 15 ஆயிரம் ரூபாவைச் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, இந்தத் தண்டனை பணத்தைச் செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கனடா செல்லவுள்ள அநுரகுமாரவுடன் அந்நாட்டுத் தூதுவர் முக்கிய சந்திப்பு.
பாகிஸ்தானில் உருவான புதிய அரசாங்கம் தப்பிப் பிழைக்குமா ?
பச்சிளம் குழந்தை நரபலி..கேரளாவை உலுக்கிய சம்பவம்
10-ஆம் வகுப்பு: பிற தாய்மொழி மாணவா்கள் தமிழ் தோ்வு எழுத விலக்கு
பெயிலாகிட்டா கல்யாணம் ஆகிடும்.. விடைத்தாளில் பகீர் கிளப்பிய மாணவி!
செப்டம்பர் 17 ‘ஹைதராபாத் விடுதலை தினம்’: மத்திய அரசு அறிவிப்பு