ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம்
நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பதாகவும், ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புது தில்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவு
முதல்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
முதல் கட்டம்
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் விவரம்
அருணாச்சல் 2, அசாம் 5, பிகார் 4, சத்தீஸ்கர் 1, மத்தியப் பிரதேசம் 6, மகாராஷ்டிரம் 5, மணிப்பூர் 2, மேகாலயா 2, மிசோரம் 1, நாகலாந்து 1, ராஜஸ்தான் 12, சிக்கிம் 1, தமிழ்நாடு 29, திரிபுரா 1, உத்திரப் பிரதேசம் 8, உத்தரகண்ட் 5, மேற்கு வங்கம் 3, அந்தமான் நிகோபார் தீவுகள் 1, ஜம்மு-காஷ்மீர் 1, லட்சத்தீவு 1, புதுச்சேரி 1.
இரண்டாம் கட்டம்
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நாளில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதி விவரம்.. அசாம் 5, பிகார் 5, சத்தீஸ்கர் 3, கர்நாடகம் 14, கேரளம் 20, மத்தியரப் பிரதேசம் 7, மகாராஷ்டிரம் 8, மணிப்பூர் 1, ராஜஸ்தான் 13, திரிபுரா 1, உத்திரப் பிரதேசம் 8,மேற்கு வங்கம் 3, ஜம்மு-காஷ்மீர் 1.
மூன்றாம் கட்டம்
நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் விவரம்
அசாம் 4, பிகார் 5, சத்தீஸ்கர் 7, கோவா 2, குஜராத் 26, கர்நாடகம் 14, மத்தியப் பிரதேசம் 8, மகாராஷ்டிரம் 11, உத்திரப் பிரதேசம் 10, மேற்கு வங்கம் 4, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ 2, ஜம்மு-காஷ்மீர் 1,
நான்காம் கட்டம்
நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் விவரம்
ஆந்திரம் 25, பிகார் 5,ஜார்க்கண்ட் 4, மத்தியப் பிரதேசம் 8, மகாராஷ்டிரம் 11, ஒடிசா 4, தெலங்கானா 17, உத்திரப் பிரதேசம் 13, மேற்கு வங்கம் 8, ஜம்மு-காஷ்மீர் 1.
ஐந்தாம் கட்டம்
ஐந்தாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கிறது. அதில், பிகார் 5,ஜார்க்கண்ட் 3, மகாராஷ்டிரம் 13, ஒடிசா 5, உத்திரப் பிரதேசம் 14, மேற்கு வங்கம் 7, ஜம்மு-காஷ்மீர் 1, லடாக் 1 பகுதிகளில் வாக்குப்பதிவு.
ஆறாம் கட்டம்
ஆறாம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆறாம் கட்ட தேர்தலில் பிகார் 8, ஹரியாணா 10, ஜார்க்கண்ட் 4, ஒடிசா 6, உத்திரப் பிரதேசம் 14, மேற்கு வங்கம் 8, தில்லி 7,
ஏழாம் கட்டம்
ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் பிகார் 8, ஹிமாச்சல் 4, ஜார்க்கண்ட் 3, ஒடிசா 6, பஞ்சாப் 13, உத்திரப் பிரதேசம் 13, மேற்கு வங்கம் 9, சண்டீகர் 1 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.
ஏழு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது. தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் கிட்டத்தட்ட 45 நாள்கள் இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
நீதி கோரி வவுனியாவில் இன்று பெரும் போராட்டம்! – ஆதரவாக யாழில் இருந்து வாகனப் பேரணி.
கெஹலிய பிணை விண்ணப்பம் சமர்ப்பிப்பு! – திங்கள் பரிசீலனை.
ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட்டார் ரணில்!
மக்களுக்கு நன்மைகளை வழங்குங்கள்! – பிரதேச செயலாளர்களிம் ஜனாதிபதி கோரிக்கை.
வவுனியாவில் இன்றைய போராட்டத்தில் இணைந்துகொள்ள வருமாறு கைதானோரின் உறவினர்களும் அழைப்பு!
செங்கடலில் வணிகக் கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்.
ரம்ஜான் நோன்பு காலத்தில் காஸாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு.
வாலாஜாப்பேட்டை அருகே காரில் குட்கா, பான்மசாலா கடத்தல்: 3 கார் பறிமுதல்; 4 பேர் கைது
கோவையில் பிரதமா் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி!
சென்னையில் 2025 ஜூனில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் அறிவிப்பு