டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்.. மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் நீதிபதி உத்தரவு!
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணைக்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்தது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி, கெஜ்ரிவாலுக்கு எட்டு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடும்படி கோரியது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜரான கெஜ்ரிவால், சம்மன் நிராகரிப்பை காரணம் காட்டி தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்க, தனக்கு ஜாமின் வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி திவ்யா மல்ஹோத்ரா, ஒரு லட்சம் ரூபாய் பிணைத் தொகையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இதன் மூலம் மக்களவைத் தேர்தல் சமயத்தில் அமலாக்கத்துறையால் ஜெக்ரிவால் அதிரடியாக கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
யாழ். சாட்டி கடலில் மூழ்கி 11 வயது சிறுமி பரிதாப மரணம்!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் யாழ். விஜயம்!
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 19 பேர் இன்று அதிகாலை கைது!
தமிழில் புகார் அளிக்க காவல்துறை அவசர எண் 107.
2026க்கு பின்னர் கல்வியில் தோல்வியடையா பாஸ் மட்டும்!
தேர்தல் நடத்தை அமல்: முதல் நாளிலேயே அதிரடி காட்டிய போலீசார்
இந்தியா கூட்டணி பொதுக் கூட்டம்: மும்பை புறப்பட்டார் முதல்வர்!
தேர்தல் அறிவிப்பு; தவெகவில் திடீர் ஆலோசனை – பிளானையே மாற்றிய விஜய்!