மக்களை பிளவுபடுத்தும் பாஜக வீட்டுக்கு அனுப்பப்படும் – மும்பையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
பாஜகவை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மும்பையில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராகுல் காந்தியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பேரறிஞர் அண்ணா எழுதிய ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பை ராகுல்காந்திக்கு பரிசளித்தார். இதனையடுத்துக்கு நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின் “எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைக் கூறுவதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன். கன்னியாகுமரியில் அவரது இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன்.
உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டெல்லியை எட்டும். இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும். சகோதரர் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பாஜகவை தூக்கமிழக்கச் செய்தது.
இந்தப் பயணம் ராகுல் காந்தி என்ற தனிமனிதரின் பயணம் இல்லை. இது இந்தியாவுக்கான பயணம். அதனால்தான் இது இந்திய ஒற்றுமை நியாயப் பயணம். பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும்.
அதுதான் நம் இலக்கு. பாஜகவால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது. மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பா.ஜ.க.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. இந்தியாவைக் காப்பாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்! இந்தியாவே எழுக” என்று பேசியுள்ளார்.
மேலதிக செய்திகள்
அந்தியேட்டி, வீட்டுக் கிருத்திய அழைப்பிதழ்
யாழில் குடும்பப் பெண் அடித்துப் படுகொலை! – மதுபோதையில் கணவன் வெறியாட்டம்.
வவுனியாவில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்.
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் விபத்தில் சிக்கி மரணம்.