பாராளுமன்றம் சென்று தூங்குவோரையும் , மக்களுக்கு சேவை செய்யாதோரையும் தேர்வு செய்யாதீர்கள் – கணேஸ் வேலாயுதம் (Video)
இம்முறை தேர்தலிலில் ஆவது மக்கள் தேர்வு செய்வோர் , சரியானவர்களாக இருக்க வேண்டும். சில அபேட்சகர்கள் தங்களது கட்சி தலைவர்களது படங்களைக் கூட போடாது விளம்பரம் செய்கிறார்கள். காரணம் அந்த தலைவர்களது படங்களை போட்டால் வாக்குகள் கிடைக்காது என அவர்களுக்கு தெரியும். அந்தளவு இந்த அபேட்சகர்கள் பயப்படுகிறார்கள். அதிலிருந்தே இவர்கள் எப்படியான ஏமாற்றுகாரர்கள் என மக்கள் உணர வேண்டும். இவர்கள் இதுவரை எதையும் மக்களுக்கு செய்தவர்களும் இல்லை. இனி செய்யப் போவதும் இல்லை. அவர்களது சுயநல தேவைகளை மட்டுமே அவர்கள் அங்கு சென்று பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அதனால் பொது மக்களுக்கோ அல்லது அவர்களுக்கு வாக்களிப்போருக்கோ எந்த நன்மையும் இல்லை.
இதுவரை பாராளுமன்றம் சென்றவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என ஒருமுறை சிந்தித்து பாருங்கள். இவர்கள் மீண்டும் போய் என்னதான் செய்யப் போகிறார்கள். இதுவரை எதையும் செய்தாதவர்கள் , இனியும் போய் எதையும் செய்யப் போவதில்லை. அதையாவது இனி மக்கள் சிந்திக்க வேண்டும். பலர் பாராளுமன்றத்தில் தூங்குவதற்காக போகிறார்கள். அவர்களை ,அவரவர் வீட்டிலேயே தூங்க விடுங்கள். அப்படியானோரை மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்ப தேவையில்லை. சேவை மனப்பான்மையோடு செயல்படுவோரை , இம்முறையாவது தேர்வு செய்து அனுப்புங்கள். அதனால் மக்கள் நிச்சயம் பலனடைவார்கள் என செய்தியாளர் சந்திப்பில் சிவன் பவுண்டேசன் ஸ்தாபகரும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான , கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
Comments are closed.