திருவண்ணாமலையில் பேய்கள் நடமாட்டம்; வெள்ளை நிற மர்ம உருவங்கள் – பீதியில் மக்கள்!
திருவண்ணாமலையில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக பொது மக்கள் குறிப்பிட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் பக்கிரிப்பாளையம் கிராமம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு திரும்பிய கார் விபத்தில் சிக்கி குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மீண்டும் அதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் பலர் இறந்துவிட்டனர். தொடர்ந்து நடந்த விபத்துகளில் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.
இந்த சம்பவம் நடந்த பகுதி அடர்ந்த காடு போல காணப்படுகிறது.
சாலையில் அடர்ந்த தைலம் மரங்கள், கருவேல மரங்கள், அதிகம் உள்ளதால் சாயங்காலம் வெகுசீக்கிரத்திலேயே அங்கு இருண்டுவிடுகிறதாம். மாலை 6 மணி ஆகிவிட்டால் சுழல் காற்று வீக்கமாக வீசுகிறது நாய்கள் அந்த விபத்து நிகழ்ந்த இடத்தை சுற்றி சுற்றி வருகின்றது பறவைகள் அலறல் காதைக் கிழிக்கும் திடீரென சாலைகளில் பனி படர்ந்து மூடிக்கொள்ளும் என கூறுகின்றனர்.
சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவங்கள் பல நடமாட்டம் இருப்பதாகவும் அது விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆவியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் பொழிந்துசாய்ந்து பின், அந்த சாலையில் செல்ல பயமாக உள்ளதாகவும, வீட்டில் வாசப்படியிலேயே வேப்பிலையை கட்டி வைத்து, விளக்கேற்றி சாமி கும்பிடுவதாகவும் மக்கள் பீதியில் கூறுகின்றனர்.
இதை தொடர்ந்து அந்த சாலையில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பூஜைகள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது யாவும் உண்மையா? பொய்யா என்று அறியப்படாத நிலையில், இனி அந்த சாலையில் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வேகத்தடைகளை அமைத்து, ஒளிரும் விளக்குகளையும் வழியெங்கும் பொருத்தினால் மக்களின் அச்சத்தை போக்கலாம்.
மேலதிக செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சி இந்த வாரம் முடிவு
இளவாலை தொழிற்பயிற்சி நிலைய பெயரில் நடத்தப்பட்ட விபச்சார விடுதி!
இ.போ.ச. பஸ் விபத்தில் 18 பேர் காயம்!
தமிழக – வடக்கு கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கவே டக்ளஸ் முயற்சி – சுரேஷ் பகிரங்கக் குற்றச்சாட்டு
இ.போ.ச. பஸ் விபத்தில் 18 பேர் காயம்!
தமிழக – வடக்கு கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கவே டக்ளஸ் முயற்சி – சுரேஷ் பகிரங்கக் குற்றச்சாட்டு
திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்!
கோப் குழுவிலிருந்து 7 எம்.பிக்கள் விலகல்
கல்வி அமைச்சுடன் மைக்ரோசொவ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்து
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணிலே! – செந்தில் தெரிவிப்பு
அதிமுக மக்களவை முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் – அறிவித்த பொதுச்செயலாளர் இபிஎஸ்..!
தொழுகை நேரத்தில் ஹனுமன் பஜனை – கடைக்காரர் மீது சரமாரி தாக்குதல்!