டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது?
இந்தியாவின் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal), மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கிய விவகாரத்தின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத் துறையினரால் சில மணிநேரம் விசாரிக்கப்பட்ட பிறகு அவர்
தடுத்துவைக்கப்பட்டார்.
இந்தியாவில் வரவிருக்கும் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் கூட்டணியின் முக்கியத் தலைவர் கெஜ்ரிவால்.
மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக அவரது அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
முன்பு மதுபான விற்பனை முற்றிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
தனியார் நிறுவனங்களும் உரிமம் பெற்று மதுபானக் கடைகளை அமைக்க கெஜ்ரிவாலின் நிர்வாகம் சர்ச்சைக்குரிய கொள்கையை மூவாண்டுக்கு முன் அறிமுகம் செய்தது.
ஊழல் குற்றச்சாட்டுகளால் ஓராண்டில் அந்தக் கொள்கை மீட்டுக்கொள்ளப்பட்டது.