ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பலி.
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் அருகே நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தஹார் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றிற்கு அருகில் நேற்று காலை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதலுக்கு எந்தவொரு தரப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு இது என்றும், குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிப்புச் சம்பவத்தின் போது, தலிபான் உறுப்பினர்கள் பலர் தங்களின் சம்பளத்தைப் பெறுவதற்காக வங்கிக்கு அருகில் கூடியிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.