மாஸ்கோவில் தாக்குதலை , ISIS பொறுப்பேற்றுள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள மண்டபத்தில் நேற்றிரவு (22) ஆயுததாரிகள் குழு நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 100 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நேரத்தில் ரஷ்ய ராக் இசைக்குழு பிக்னிக்கின் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, அதற்காக 6,000 க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் மேடை ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மண்டபமும் தீப்பிடித்தது, ஆனால் பிக்னிக் இசைக்குழு உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ்ஐஎஸ்-ஐச் சேர்ந்த செய்தி நிறுவனமான அமாக் , நடத்திய தாக்குதலுக்குப் பிறகு டெலிகிராமில் வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், பயங்கரவாத குழு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் கோரிக்கையை நிரூபிக்க தேவையான ஆதாரங்களை வழங்கவில்லை.
இந்த நிகழ்வு தொடர்பான அறிக்கையில், மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் மாஸ்கோவில் அனைத்து விளையாட்டு, கலாச்சார மற்றும் பிற பொது நிகழ்வுகளை இந்த வார இறுதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் நடைபெறும் நிகழ்வுகள் உட்பட பெரும் கூட்டங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரகம் இம்மாத தொடக்கத்தில் தகவல் தெரிவித்திருந்ததன் பின்னணியில் இந்த பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது.