வடக்கில் 70 வீதமான வன்புணர்வுகள் சிறுமிகளின் சம்மதத்துடனே என்று பொலிஸார் அதிர்ச்சித் தகவல்.
வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பொலிஸ் முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான வன்புணர்வுகளில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்மதத்துடனேயே இடம்பெற்றுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பொலிஸ் திணைக்களத்திடம் கோரப்பட்ட தகவல்கள், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்னவால் வழங்கப்பட்டுள்ளன. அதிலேயே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.
வடக்கில் 131 வன்புணர்வுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 90 சம்பவங்கள் சிறுமிகளின் இணக்கத்துடன் இடம்பெற்றுள்ளன. 33 சம்பவங்கள் மாத்திரமே அவர்களின் இணக்கமில்லாது நடந்துள்ளன.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய 143 சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.