எந்த அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார்! – முல்லைத்தீவில் சஜித் தெரிவிப்பு.
இலங்கை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 140 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, முத்தையன்கட்டு, இடதுகரை தமிழ்க் கலவன் பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (03) நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் பிரச்சினைகள் குறித்து விவாதம் தேவை என தற்போது சமூகத்தில் பேசப்படுகின்றது. இத்தகையதொரு விவாதம் நடக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.
விவாதங்களை நடத்துவது ஜனநாயக சமூகத்தின் உயர் பண்பு என்பதால் பொருளாதாரம், சமூகம், அரசியல், சர்வதேசம் என எந்தவொரு தலைப்பிலும் விவாதத்தில் ஈடுபட நாம் தயாராக இருகின்றோம்.
அதேபோல், விவாதம் புரிவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் பெறுமானம் சேர்ப்பதாக அமைய வேண்டும்.
எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் விவாதங்களுடன் மாத்திரம் மட்டுப்படாமல் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்.” – என்றார்.
மேலும் செய்திகள் :
தமிழ் பொதுவேட்பாளரால் தமிழ் மக்களின் வாக்குகள் ஒருபோதும் பிளவுபடாதாம்! – விக்கி சொல்கின்றார்.
தமிழ் பொதுவேட்பாளரால் தமிழ் மக்களின் வாக்குகள் ஒருபோதும் பிளவுபடாதாம்! – விக்கி சொல்கின்றார்.
தைவானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; குறைந்தது ஒன்பது பேர் பலி.
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் போட்டியிட்டால் முழு ஆதரவு! – மொட்டு எம்.பி. வீரசிங்க கூறுகின்றார்.
ரஷ்ய – உக்ரேனிய போர் களத்தில் ஶ்ரீலங்கா இராணுவ வீரர்கள் : அரசு பொது மன்னிப்பு அறிவிப்பு