ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது.
ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபா் சாதிக் வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்ததோடு வீட்டிற்கும் சீல் வைத்தனர்.
பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறையின் நடவடிக்கை என்ன? அதிஷி கேள்வி
இந்த நிலையில் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையில் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு சீல் வைத்த வீட்டைப் பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனை இல்லை என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
உலகப் பொருளாதார மன்றம் ஜீவன் தொண்டமானை உலகளாவிய தலைவராக நியமித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் அகிலனுக்கு அழைப்பாணை!
இத்தகைய முன்மொழிவுகள் இயல்பானவை, பொது ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவு தொடர்பில் மனோ கணேசன்.
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏ சார்பில் விளக்க அறிக்கை
தோ்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமா் குறித்து முடிவு: ராகுல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பதட்டம் : போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
கல்வி அமைச்சின் இணையதளம் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவராலேயே ஹேக் செய்யப்பட்டுள்ளது.
மாட்டு திருடர்களுக்கு ஆப்பு : திருடும் ஒரு மாட்டுக்காக திருடனிடம் 10 லட்சம் அபராதத்துடன் சிறை.