ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது… தேர்தல் வாக்குறுதியால் மதுப்ரியர்கள் மகிழ்ச்சி
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைத் தேர்தலும் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. 175 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாக ஆந்திரப்பிரதேசம் உள்ளது. ஆட்சியை தக்கவைக்க ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டுள்ளனர்.
வரும் தேர்தலில் பாஜகவுடன் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணும் கைகோர்த்துள்ளனர். இதில், குப்பம் தொகுதியில் போட்டியிடும் சந்திரபாபு நாயுடு, தனது பரப்புரையின் போது, ஜெகன் மோகன் ஆட்சியில், மது உள்பட அனைத்து விதமான பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டியதுடன், 50 மில்லி லிட்டர் மதுவின் விலை 60 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரித்தள்ளது என்றார்.
மேலும், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான மதுவை குறைந்த விலைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆந்திராவில் மது விற்பனை தடை செய்யப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் 13 ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் , வரும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திரைப்பட வில்லன் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார். மீண்டும் ஆட்சியை ஜெகன் கட்சி கைப்பற்றுமா இல்லை கடந்த தேர்தலில் இழந்த ஆட்சியை சந்திரபாபு நாயுடு தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலதிக செய்திகள்
பாடசாலை மாணவர்கள் STF சீருடைகள் பயன்படுத்திமை குறித்து விசாரணை : ஒருவர் கைது (Video)
ஈரான் தூதரகப் பணிமனை மீது தாக்குதல் : மற்றுமொரு போர் முனை?
நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
கடல் வழியாக பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் 90 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையம் மீது ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல்.