பாலின மாற்று அறுவை சிகிச்சை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஒழுங்குபடுத்தப்படாத பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் மூன்றாம் பாலின குழந்தைகளின் நலனைக் காக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையம் (சிஏஆா்ஏ) மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த எம்.கோபி சங்கா் என்பவா் இந்த மனுவை தாக்கல் செய்தாா். ‘இத்தகைய மூன்றாம் பாலினத்தவா்கள் வாக்காளா்களாகவும் அங்கீகரிக்கப்படுவதில்லை’ என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஒழுங்குபடுத்தப்படாத பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் மூன்றாம் பாலின குழந்தைகளை நலனைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இத்தகைய பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகள் மற்ற நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது’ என்றாா்.

இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா், சிஏஆா்ஏ உள்ளிட்ட அமைப்புகளை எதிா் மனுதாரா்களாக மனுதாரா் சோ்த்திருந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு உள்பட எதிா் மனுதாரா்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

மேலதிக செய்திகள்

பாடசாலை மாணவர்கள் STF சீருடைகள் பயன்படுத்திமை குறித்து விசாரணை : ஒருவர் கைது (Video)

ஈரான் தூதரகப் பணிமனை மீது தாக்குதல் : மற்றுமொரு போர் முனை?

நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.

கடல் வழியாக பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் 90 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையம் மீது ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல்.

சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது… தேர்தல் வாக்குறுதியால் மதுப்ரியர்கள் மகிழ்ச்சி

Leave A Reply

Your email address will not be published.