அரசியல் கட்சிகளுக்கான NPP பொது அழைப்பை ஏற்றே சுமந்திரன் கூட்டத்திற்கு வந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுவாக அரசியல் கட்சிகளுக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வந்த போது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொது அழைப்பை விடுத்ததாகவும் தனிப்பட்ட முறையில் எந்தவொரு அரசியல்வாதியையும் அழைக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொது மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர் வரவேற்கப்பட்டு அமரவைக்கப்பட்டதாகவும், ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அந்த மேடையில் பேச்சாளராக இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் எம்.பி சுமந்திரன் தமிழ் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி இணைந்து கலந்துரையாடி முன்வைத்த கருத்துக்கள் அல்ல எனவும் அவை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தும் உணர்வும் எனவும் அவர் தெரிவித்தார்.