தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடக்கிறது – நீதிமன்றத்தில் திமுக வழக்கு
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருவதோடு, பல்வேறு ஊடகங்களில் விளம்பரமும் செய்து வருகின்றன. அதுபோன்ற விளம்பரங்கள் வாக்காளர்கள் மத்தியில் மிகந்த வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இரண்டு நாட்களில் பரிசீலித்து அனுமதி தர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். ஆனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை கால தாமதம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் விளம்பரம் தொடர்பாக திமுகவின் விண்ணப்பங்களை வேண்டும் என்றே நிராகரிப்பதாகவும் திமுக கூறியுள்ளது. எனவே, தங்களது விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.
அத்துடன், விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அமர்வில் வருகின்ற திங்கட்கிழமை (ஏப்ரல்-15) விசாரணைக்கு வர உள்ளது.
மேலதிக செய்திகள்
ராஜபக்ச பட்டாளத்தின் அரசியலுக்கு வரும் தேர்தல்களில் முடிவு கட்டுவோம்! – சஜித் அணி சூளுரை.
சஜித் மற்றும் அனுரவின் பட்டப்படிப்புகளை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் : நவின் திஸாநாயக்க.
குருநாகல் வைத்தியசாலையில் கோவிட் மரணம்.
கோழைகள் போல் ஓடி ஒளியாமல் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்! – அநுரவுக்கு சஜித் மீண்டும் சவால்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கான முதல் சந்திப்பே ஏமாற்றம்! – விக்கி மாத்திரம் பங்கேற்பு.
கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கிய இளம் தலைவர் ராகுல் காந்தி!