விமலின் எம்பி ரணிலின் மேடையில் ….
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ நேற்று முன்தினம் (14) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
நுவரெலியா மீபிலிமன பிரதேசத்தில் இவ்வருட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிமல் பியதிஸ்ஸ கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்டதுடன் அவர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தற்போது விமல் வீரவன்சவின் கட்சி எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.