ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்; இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி – முக்கிய அறிவிப்பு!
கேஸ் சிலிண்டர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன்படி, பல பயனாளிகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைத்துள்ள நிலையில்,
ரூ.500 காஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சிவில் சப்ளைஸ் துறை மகாலட்சுமி திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.500 கேஸ் சிலிண்டர் திட்டத்தை 18.86 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.
ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள், சிலர் 2 ஆவது மானிய சிலிண்டரையும் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 21.29 லட்சம் பேருக்கு ரூ.59.97 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
LPG மானியத்திற்குத் தகுதிபெற, உங்கள் ஆதார் அட்டை எண், வங்கிக் கணக்கை LPG சேவை வழங்குனருடன் இணைக்க வேண்டும். மானியப் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செக் செய்யலாம்.
மேலதிக செய்திகள்
சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஆரியரத்ன அவர்களது இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை
1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி வேண்டாம் : வெளிநாட்டவரை துரத்திய ரவுடி வியாபாரி கைது…