டயலாக் உடன் இணைந்த ஏர்டெல்!
Dialog Asiata plc (Dialog), Axiata Group (Axiata) மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனம் (Barti Airtel) ஆகியவை இலங்கையில் தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பான உறுதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இதன் கீழ் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முழு பங்கு வெளியீட்டையும் டயலொக் கையகப்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது, டயலொக் பங்குதாரர்களின் ஒப்புதல் மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனுமதி மற்றும் பிற ஒழுங்குமுறை செயல்முறைகள் மற்றும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகளின் நிறைவேற்றத்திற்கு உட்பட்டது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நாட்டில் தொலைத்தொடர்பு துறையின் முன்னேற்றத்திற்கான அதன் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க இரண்டு நிறுவனங்களுக்கிடையில் முன்மொழியப்பட்ட இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இரு நிறுவனங்களின் இணைப்பானது செலவு நன்மைகளை வழங்கும், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும், இதன் மூலம் அதிவேக பிராட்பேண்ட் இணைப்புகள், அழைப்புகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக கூடுதல் சேவைகள், செலவு சேமிப்பு மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம், ஏர்டெல் லங்காவில் வெளியிடப்பட்ட முழுப் பங்குகளையும் டயலொக் நிறுவனங்களே சொந்தமாக்கிக் உள்ளது.