லோக்சபா தேர்தல் களம்.. ஏபிபி – சி வோட்டர் சர்வே
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று ஏபிபி – சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் களம் நாடு முழுக்க சூடு பிடித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏபிபி – சி வோட்டர் கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.
தமிழ்நாடு – 39 இடங்கள்
திமுக இந்தியா கூட்டணி- 39(52%)
பாஜக கூட்டணி – 00(19%)
அதிமுக – 00(23%)
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக வசம் இருந்த ஒரு தொகுதியான தேனியும் திமுக பக்கம் செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
திமுகவின் வாக்கு சதவிகிதம் 52 வரை செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி – 00(19%) வாக்கு சதவிகிதம் பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜகவை விட அதிகமாக அதிமுக – 00(23%) வாக்குகளை பெறும் கணிப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு லோக்சபா தேர்தல் கணிப்புகளில் தமிழ்நாட்டில் பாஜக 2- 10 இடங்கள் வரை கூட வெல்லும் என்று கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் இப்போது தேர்தலுக்கு 1 வாரம் கூட இல்லாத நிலையில் எல்லா இடங்களிலும் ஆளும் திமுகவே வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் – 25 இடங்கள்
இந்தியா – 00(39%) இடங்களில் வெல்லும்.
பாஜக – 25(55%) இடங்களில் வெல்லும்.
பஞ்சாப் – 13 இடங்கள்
காங்கிரஸ் – 07(30%) இடங்களில் வெல்லும்.
ஆம் ஆத்மி – 04(27%) இடங்களில் வெல்லும்.
பாஜக – 02 (21%) இடங்களில் வெல்லும்.
ஏடி- 00(16%) இடங்களில் வெல்லும்.
மேற்கு வங்கம் – 42 இடங்கள்
திரிணாமூல் – 20(44%) இடங்களில் வெல்லும்.
பாஜக – 20(42%) இடங்களில் வெல்லும்.
காங்கிரஸ் – 02(06%) இடங்களில் வெல்லும்.
சிபிஎம் – 00(06%) இடங்களில் வெல்லும்.
கர்நாடகா – 28 இடங்கள்
பாஜக என்டிஏ – 23(52%) இடங்களில் வெல்லும்.
காங்கிரஸ் – 05(42%) இடங்களில் வெல்லும்.
கேரளா – 20 இடங்கள்
காங்கிரசின் UDF – 20(43%) இடங்களில் வெல்லும்.
இடதுசாரிகளின் LDF – 00(31%) இடங்களில் வெல்லும்.
பாஜகவின் NDA கூட்டணி – 00(21%) இடங்களில் வெல்லும்.
ஒடிசா கருத்துக் கணிப்பு –
பாஜக – 11 இடங்களில் வெல்லும்.
பிஜேடி- 09 இடங்களில் வெல்லும்.
காங்கிரஸ் – 01 இடங்களில் வெல்லும்.
மற்ற – 00 இடங்களில் வெல்லும்.
தெலுங்கானா கருத்துக்கணிப்பு –
காங்கிரஸ்- 12 இடங்களில் வெல்லும்.
பாஜக – 03 இடங்களில் வெல்லும்.
பிஆர்எஸ் – 01 இடங்களில் வெல்லும்.
ஏஐஎம்ஐஎம்- 01 இடங்களில் வெல்லும்.