உறவு கொள்ளாமல் கருவுற்ற இளம் மாணவி… காதலன் கூட இல்லை
ஹெட்டிபோல பகுதியில் உடலுறவு கொள்ளாமல் கர்ப்பமாகிவிட்டதாக நம்பப்படும் 13 வயது மைனர் பாடசாலை மாணவி எப்படி கர்ப்பமானார் என்பதை சட்ட வைத்திய அதிகாரியால் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஹெட்டிபோல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அறிவித்ததையடுத்து சிறுமி அழுது கொண்டே சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் தாம் இதுவரை எந்த ஒரு நபருடனும் காதல் உறவைக் கூட கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டிய வைத்தியசாலையின் பிரதம நிபுணர் சட்ட வைத்திய அதிகாரி பி.கே.விஜேவர்தனவிடம் சிறுமியை அனுப்பி வைத்ததையடுத்து, சிறுமியை பரிசோதித்த வைத்திய நிபுணர், அவர் பாலியல் உறவில் ஈடுபட்டதே இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால் மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவரது மனநலம் மேம்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என தடயவியல் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சிறுமி எப்படி கர்ப்பமானார் என்பது புரியாத புதிராக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.