ஆளில்லா விமானம், ஏவுகணைப் போரில் உக்ரைனும் ரஷ்யாவும் மோதல்!
உக்ரைன் மீது ரஷ்யா இன்று (27) பாரிய ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அந்நாட்டின் எரிசக்தி விநியோகத்தை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரேனிய சக்தி அமைப்பை இலக்கு வைத்து நடத்தப்படும் நான்காவது பாரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவால் ஏவப்பட்ட சமீபத்திய 34 ஆளில்லா தாக்குதல் விமானங்களில் 21 ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒரு டெலிகிராம் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு ஏவுகணையையும் ஒவ்வொரு ட்ரோனையும் சுட்டு வீழ்த்துவதற்கு உக்ரைனுக்கு உலகிற்கு உதவ வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.