குளியாப்பிட்டிய இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் முன்னாள் வடமேற்கு முதலமைச்சரிடம் விசாரணை!
குளியாப்பிட்டிய இளைஞனை கடத்திச் சென்ற வாகனம் மாத்தளையில் கண்டுபிடிப்பு !
காணாமல் போன குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளம் வர்த்தகர் சுசித் ஜெயவன்சவை கடத்த பயன்படுத்திய வேன் இன்று மாத்தளையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் திகதி தனது காதலியின் வீட்டுக்குச் சென்ற சுசித் ஜயவன்ச, அன்று முதல் காணாமல் போயுள்ளார், அதன் பின்னர் அவரது காதலியும் அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்த பிரதேசத்தை விட்டு காணமல் போயுள்ளனர்.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இளைஞனை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல தகவல்களை பொலிஸாருக்கு கண்டறிய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காதலியின் வீட்டுக்குச் சென்று காணாமல் போன இளம் வர்த்தகர் சுசித் ஜெயவம்ச காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் வடமேற்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்கவிடம் கடந்த வியாழன் 3 மணிநேரம் விசாரணை நடத்தியதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சுசித் ஜெயவம்ச காணாமல் போன சம்பவத்துடன் முன்னாள் முதலமைச்சருக்கு தொடர்பிருப்பதாக உரிய விசாரணை குழுக்களுக்கு கிடைத்த தகவலின்படி, 30 வயதான வர்த்தகர் சுசித் ஜெயவம்ச காணாமல் போன சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் நபர் அதாவது அவரது காதலியின் தந்தை கடத்தலுக்கு முந்திய நாள் முன்னாள் முதலமைச்சருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்ததன் காரணமாகவே இவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிக்கையின்படி, விசாரணையின் போது, சந்தேகநபர் தனது மகளின் பிரச்சினை குறித்து தம்மிடம் ஆலோசனை கேட்டதாகவும், இது தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் பிரதான சந்தேகநபர் பதினெட்டாயிரம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தொழிலதிபரின் காதலியின் தந்தையின் வீட்டில் வைத்து தும்மலசூரியவில் உள்ள அவரது மாளிகைக்கு அழைத்துச் சென்று கை, கால்களை கட்டிய நிலையில் வேனில் ஏற்றிச் செல்வதற்காக இருவரும் பணத்தைக் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், சந்தேக நபர்கள் வெலிமடையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெற்ற பணம் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் மனைவியின் வயோதிப தாய் மற்றும் தந்தையையும் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
கோர விபத்தில் உயிரியல் பாட ஆசிரியர் பரிதாபச் சாவு!
இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ள அனுரகுமார.
தேர்தலுக்குச் சென்றால் பொருளாதாரம் குலைந்து போகும்..- மத்திய வங்கி.
ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிசினஸ் வீழ்ச்சி.
பிரசாரத்திலிருந்து ஒதுங்கிய குஷ்பு : கடுப்பாகியுள்ள அண்ணாமலை தரப்பு!
கர்நாடகாவை அதிரவைத்துள்ள பா.ஜ.க கூட்டணி வேட்பாளரின் காமலீலைகள்: வைரலான வீடியோக்களால் பின்னடைவு?
விசா பகுதி செயலிழந்தது சதியாலா? அரசு விசாரணை.
இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்தியது துருக்கி!
மும்பை அணிக்கெதிரான போட்டியில் கல்கட்டா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு
நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலாவின் தற்கொலை வழக்கு : காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை