மர்மமான முறையில் இறந்த ஜெயக்குமார்; சிக்கிய 2வது கடிதம் – பரபரப்பு தகவல்!
ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை, கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்(60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். மேலும், காண்டிராக்டர் தொழிலும் ஈடுபட்டு வந்தார்.
இவர் தோட்டம் ஒன்றில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து, அவரது கட்சி அலுவலகத்தில் அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதன் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “எனக்கு 16 நபர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை குடும்பத்தினர் யாரும் பழிவாக வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும்.
மகளின் திருமணத்தை அனைவரும் சிறப்பாக நடத்திக் கொடுத்தீர்கள்; என் அன்பு உங்கள் மீது எப்போதும் உண்டு. மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டால் என்னை மன்னிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த 4 பக்க கடிதத்தை அன்பு மருமகன் ஜெயபாலுக்கு எழுதியுள்ளார்.
இவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை, “மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகியின் கடிதம் தொடர்பாக கடிதத்தில் பெயர்கள் உள்ள நபர்களிடம் விசாரணைநடத்தி வருகிறோம்.
மே 3-ந்தேதி ஜெயக்குமாரின் மகன் புகார் தரும்போதுதான் எஸ்.பி., மருமகனுக்கு எழுதிய 2 கடிதங்கள் தரப்பட்டன. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
மொட்டை கைவிட்டு.. ஜனாதிபதியுடன் இணைந்த லொஹான்.
போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை.
தோட்டத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஜனாதிபதி தொழிலாளர்களோடு …..
அரபு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு.
ரணில் – பஸில் இன்றும் சந்திப்பு!
சு.க. ஆட்சி விரைவில் மலரும்! – மைத்திரி இப்படி நம்பிக்கை.
பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி.
இந்தோனேஷியாவின் தொடர்ந்து பெய்யும் கனமழையால் 14 பேர் உயிரிழந்தனர்.
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு.
காஷ்மீரில் விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது
2022ம் ஆண்டுக்கான GCE (O/L) மறு ஆய்வு : 2023ம் ஆண்டுக்கான GCE (O/L) தேர்வு தகவல்
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்ப முயன்றவர் விமான நிலையத்தில் கைது.